Friday, January 4, 2008

அந்தரங்கம்

...................
...பயணங்களின் நடுவே
அதிகப்படியான அக்கறையுடன்
மறைப்பதாய் நினைக்கும் என் ஆடை,
பாலியல் மீதான
குரூரப் பார்வைகளுக்கு மத்தியில்
அதனையும் மீறிய
அங்க வர்ணிப்புகளில்
களிப்புறுகின்றன
அவன்களின் வக்கிரங்கள்...

அம்பலமாக்கப்படுகிறது
எல்லா நிலைகளிலும்
என்.....?

என் அந்தரங்கத்தை
நிர்வாணப்படுத்துகின்றன
எனது கண்கள்
அதையும் தாண்டி
அருவமாய் மறைகிறது
என் மனம்.

No comments:

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

More than a Blog Aggregator